சுற்றி வளைத்த பொதுமக்கள்! மாட்டிக்குவோமோ என்ற பயத்தில்... 4-வது மாடியிலிருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்த திருடன்! பகீர் வீடியோ..!!!
பாகிஸ்தான் கராச்சி நகரில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர், பொதுமக்களிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். குடியிருப்பாளர்கள் அந்த நபரைச் சுற்றி வளைத்ததால், கட்டிடத்தின் வெளிப்புறம் வழியாக இறங்க முயன்னறுள்ளார் . அவர் கீழே விழும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கட்டிடத்தின் வெளிப்புறம் வழியாக தப்ப முயற்சி
கராச்சியின் மஹ்மூதாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக சில சமூக வலைதளப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், திப்பு சுல்தான் பகுதியில் உள்ள காலி அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த சம்பவத்துடன் இது தொடர்புடையதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுது! கொதிக்கும் எரிமலை குகைக்குள் நுழைந்த நபர்..! ஆனால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..! பகீர் வீடியோ..!!!
குடியிருப்பாளர்கள் அந்த நபரைச் சுற்றி வளைத்ததால், வழக்கமான பாதையில் வெளியேற முடியாமல் அவர் குளியலறையின் காற்றோட்டப் பகுதி வழியாக கீழே இறங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பிடி நழுவியதால், முதலில் தரைத்தளத்தில் இருந்த கடையின் மேற்கூரையிலும், பின்னர் சாலையிலும் விழுந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை; போலீசார் கைது
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அந்த நபரை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக ஜின்னா மருத்துவமனையில் அனுமதித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
உயரமான கட்டிடத்திலிருந்து அந்த நபர் கீழே விழும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. திருட்டு முயற்சிகளின்போது பொதுமக்கள் சூழ்ந்து கொள்வதால், தப்பிக்க ஆபத்தான வழிகளைத் தேர்வு செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைக்கு வழிவகுக்கிறது.
பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்
பல மாடிக் கட்டிடங்களில் இருந்து தப்பிக்க முயன்று குதிப்பது அல்லது வெளிப்புறம் வழியாக இறங்குவது உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தக்கூடும். எனவே, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கும் நேரங்களில் பொதுமக்கள் ஆத்திரத்தில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்காமல், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதே பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும்.
کراچی کے علاقے محمود آباد میں چور بلڈنگ میں گھس گیا علاقے والوں نے بلڈنگ کو گھیرے میں لے لیا چور نے چوتھی منزل سے چھلانگ لگا دی https://t.co/CEm8ecVRtP
— Engr Shakir Khan ( JUI ) (@engrshakirkhan) November 25, 2026