சிறுவனுக்கு கேக்கை ஊட்டி விட்ட முதல்வர் விஜய் கேட்ட கேள்வி! குழந்தை கொடுத்த ரியாக்சன் தான் ஹைலைட்.... இணையத்தை கலக்கும் வீடியோ..!!!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழா சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்றது. அங்கு மாணவர்களுடன் நேரம் செலவிட்ட விஜய், அவர்களுக்கு நேரில் கேக் வழங்கி வாழ்த்தினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள்
நவம்பர் 14-ம் தேதியான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு டெண்டர்கள் கோரப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை...! CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! இல்லத்தரசிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்..!!!
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு தனது கைகளால் கேக் வழங்கினார். மேலும், 'பிரியமுடன் விஜய்' என்ற வாசகம் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகளையும் குழந்தைகளுக்கு தனித்தனியாக வழங்கினார்.
குழந்தைக்கு கேக் ஊட்டிய விஜய்
விழாவின் போது சிறுவன் ஒருவரை கைகளில் தூக்கிய விஜய், அவருக்கு கேக் ஊட்டிவிட்டார். பின்னர், கேக் நன்றாக இருக்கிறதா என்று அன்புடன் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், 'ரொம்ப நல்லா இருக்கு சார்' என்று புன்னகையுடன் பதிலளித்தார். இந்த உரையாடல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
விஜய் குழந்தைகளுடன் கலந்துரையாடிய காட்சிகள் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குழந்தைகளுடன் அவர் இயல்பாகப் பழகிய தருணங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளன.
#WATCH | குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கி ஊட்டிவிட்ட முதலமைச்சர் விஜய்.
#SunNews | #Vijay | #ChildrensDay https://t.co/rPuD9MhyD0
— Sun News (@sunnewstamil) November 13, 2026
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.. பயிர்க்கடன் தள்ளுபடி..! விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!!