நல்ல மனசு..! மின்சாரம் தாக்கி கம்பத்திலேயே மயங்கி தொங்கிய ஊழியர்! அடுத்த நொடி ஏறி சி.பி.ஆர் கொடுத்த உயிரை காப்பாற்றிய சக ஊழியர்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில், மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் மயங்கித் தொங்கிய ஊழியரை சக ஊழியர் ஒருவர் துணிச்சலுடன் மீட்டுள்ளார். கம்பத்தின் உச்சிக்கே ஏறி அவருக்கு சி.பி.ஆர். முதலுதவி அளித்ததால் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆபத்தான சூழலில் சக ஊழியரின் உயிரைக் காப்பாற்றிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மின்சாரம் தாக்கி கம்பத்தில் மயங்கித் தொங்கிய ஊழியர்
அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் மண்டல மையத்தில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் ராஜு என்ற தனியார் மின் ஊழியர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் சுயநினைவை இழந்த அவர், மின்கம்பிகளுக்கு இடையே தொங்கிய நிலையில் இருந்தார்.
இதையும் படிங்க: மூளை அறுவை சிகிச்சையின் போது சிரித்துக்கொண்டே.. கையில் மணி அடித்த நோயாளி..! பின்னணி காரணம் என்ன தெரியுமா..? வைரல் வீடியோ..!!!
கம்பத்தின் உச்சியில் CPR முதலுதவி
இதைக் கண்ட சக ஊழியர்களும் அப்பகுதி மக்களும் உடனடியாக மின் விநியோகத்தைத் துண்டித்தனர். ராஜுவை கீழே இறக்குவதற்குள் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை உணர்ந்த சக ஊழியர் ஒருவர், துளியும் தாமதிக்காமல் மின்கம்பத்தின் உச்சிக்கு ஏறினார். அங்கேயே ராஜுவுக்கு சி.பி.ஆர். முதலுதவி அளிக்கத் தொடங்கினார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
முதலுதவிக்குப் பிறகு ராஜுவின் உடலில் அசைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்யாணதுர்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அனந்தபூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த சக ஊழியரைக் காப்பாற்றிய நபரின் துணிச்சல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
కరెంట్ షాక్.. స్తంభంపైనే CPR
— greatandhra (@greatandhranews) November 26, 2026
అనంతపురం జిల్లా కంబదూరు మండల కేంద్రంలో గురువారం ప్రైవేటు విద్యుత్ కార్మికుడు రాజు కరెంట్ షాక్కు గురై స్తంభంపైనే ఇరుక్కున్నాడు.
తోటి సిబ్బంది, స్థానికులు గమనించి విద్యుత్ సరఫరాను నిలిపివేసి, పైకి ఎక్కి రాజుకు సీపీఆర్ చేసి బతికించారు.
వెంటనే… pic.twitter.com/oAPGFicrkR
இதையும் படிங்க: ஐயோ... குடிநீர்க் குழாய் உடைந்து பல அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சி! திகைத்து நின்ற பொதுமக்கள்... வைரல் வீடியோ..!!!