அஜித் கேட்டார்… விஜய் செய்தார்! லண்டனில் நடந்த அந்த நெகிழ்ச்சி சம்பவம்!



Minister srinath speech about Ajith and vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இடையேயான நட்பு, பரஸ்பர மரியாதை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இன்றைய தலைமுறையின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இடையே நல்ல நட்பும், பரஸ்பர மரியாதையும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு உதாரணமாக லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். அஜித்தின் தனிப்பட்ட வேண்டுகோளை விஜய் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும், அதன்படி தனது குழுவினருடன் நேரில் வந்து அந்த நிகழ்வில் பங்கேற்றதாகவும் அமைச்சர் கூறினார். 

மேலும், அங்கு நடைபெற்ற போட்டியை விஜய் தனது கையால் கொடியசைத்து தொடங்கி வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இரு முன்னணி நடிகர்களும் எதிர்பாராத விதமாக ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: உங்கள் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா?.. ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம்!

மேலும், அஜித் ரசிகர்களாக இருந்தாலும், விஜய் ரசிகர்களாக இருந்தாலும் திரைக்கு வெளியே அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அஜித்–விஜய் இடையேயான இந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் ரசிகர்களிடையே தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக ஆ. ராசா? திமுக எச்.ராஜா? என்ன வித்தியாசம் இருக்கிறது?.. வன்னி அரசு கடும் விமர்சனம்!