உங்கள் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா?.. ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம்!



Minister Nirmal Kumar condemned against DMK rasa

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் குறித்து கடுமையான மற்றும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக திமுக முன்னாள் எம்.பி ஆ.ராசா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பு குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் ஆ.ராசாவின் இந்த ஆபாச கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், என்னைப் பற்றியும், எனது தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் திமுகவின் கடைசி ஆயுதமா? திமுகவினரின் தரமற்ற பேச்சுகளை அவர்களின் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக ஆ. ராசா? திமுக எச்.ராஜா? என்ன வித்தியாசம் இருக்கிறது?.. வன்னி அரசு கடும் விமர்சனம்!

மேலும், திமுகவினரின் அட்டூழியங்களை தவெகவினர் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வார்கள் என்றும், தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தனது பேச்சு தொடர்பாக ஆ.ராசா தனது எக்ஸ் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். “உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் தொடர்பான அரசியல் சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: “தாயாரை குறிவைத்து பேசுவது அநாகரிக அரசியல்”..  அ.ராசா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!