மயக்க மருந்து ஒழுங்கா வேலை செய்யல போல....! திடீரென கண்விழித்து கூண்டை உடைத்து வனக் காவலரைத் தாக்கிய சிறுத்தை...! நடுங்கவைக்கும் காட்சி...!!!



leopard-escapes-cage-attacks-forest-guard-nepal

நேபாளத்தின் லேம்ஜங் மாவட்டத்தில் பிடிபட்ட சிறுத்தை, வன அலுவலகத்தில் திடீரென கூண்டை உடைத்து வெளியேறியது. மயக்க நிலையில் இருந்தபோதே விழித்த சிறுத்தை, அங்கிருந்த 57 வயது வனக் காவலரை தாக்கியது. காயமடைந்த அவரை மீட்கும் பணிகளுடன், தப்பிய சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறுத்தை திடீரென விழிப்பு

லேம்ஜங் மாவட்டத்தின் தூங் கோலா பகுதியில் சிறுத்தை ஒன்று பிடிபட்டது. இதையடுத்து அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, பெசிசஹாரில் உள்ள வன அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறிய கூண்டில் இருந்த சிறுத்தையை பெரிய அடைப்பிடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முயன்றனர்.

இதையும் படிங்க: “வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது!”.. வாடகைதாரருடன் மோதல்.. கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கைது!

அப்போது எதிர்பாராத வகையில் சிறுத்தை விழித்துக்கொண்டது. கூண்டுக்குள் இருந்து வெளியேற முயன்ற அது, கதவை வலுக்கட்டாயமாக உடைக்கத் தொடங்கியது. சில நொடிகளில் கதவை திறந்துகொண்டு வெளியே வந்த சிறுத்தை, அருகில் இருந்த வனக் காவலர் புத்தி ஜங் குருங் மீது பாய்ந்தது.

வனக் காவலரை தாக்கிய சிறுத்தை

57 வயதான புத்தி ஜங் குருங் மீது பாய்ந்த சிறுத்தை அவரை கீழே தள்ளி தாக்கியது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி உலோகக் கம்பியைக் கொண்டு சிறுத்தையை விரட்ட முயன்றனர். தாக்குதலில் வனக் காவலருக்கு காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்கிருந்து தப்பிய சிறுத்தை, வன அலுவலக வளாகத்துக்குள் ஓடியது. அங்கிருந்த தூண்களில் ஏறவும் அது முயன்றது. இதனால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுமக்களை அப்புறப்படுத்தி சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

சிறுத்தை அலுவலக வளாகத்துக்குள் இருப்பதாக தகவல் பரவியதும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் தடுப்புகள் மற்றும் கூண்டுகளை பயன்படுத்தி சிறுத்தை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

 

இதையும் படிங்க: இப்படி கூட இருக்குமா? குழந்தையின்மை பிரச்சனையை சரிசெய்ய மருத்துவமனைக்குச் சென்ற 26 வயது இளைஞர்! ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்ததும் கண்ட அதிர்ச்சி... வினோத சம்பவம்!!!