பாஜக ஆ. ராசா? திமுக எச்.ராஜா? என்ன வித்தியாசம் இருக்கிறது?.. வன்னி அரசு கடும் விமர்சனம்!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் குறித்து கடுமையான மற்றும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த #திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.
கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த
#திமுக
இப்போது
வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு
இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணி ஆற்றியவர்
அண்ணன் @dmk_raja அவர்கள்.
இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.
இதையும் படிங்க: “தாயாரை குறிவைத்து பேசுவது அநாகரிக அரசியல்”.. அ.ராசா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!
“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது
பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?
அதானால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் @ThamizhachiTh அவர்கள்,
திரு.ஆ.ராசா அவர்கள் அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை
கவிழ்ந்தவாறு இருப்பார்.
முதல்வரை ஓடுகாலி என
திரு.சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர்
மதிப்புமிகு
கவிஞர் கனிமொழி அவர்கள் குறித்து
பாஜகவை சார்ந்த திரு.எச்.ராஜாவும்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த
திரு.சீமான் அவர்களும்
மிக இழிவாக பேசிய போது,
கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள்
இப்போது,
திமுக பேச்சாளர்களின்
இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.
பாஜக ஆ. ராசா
திமுக எச்.ராஜா
என்ன வித்தியாசம் இருக்கிறது?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.9.2026
— வன்னி அரசு (@VanniTamizhVCK) September 12, 2026
திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் அண்ணன் @dmk_raja அவர்கள். இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும். “எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? அதானால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் @ThamizhachiTh அவர்கள், திரு.ஆ.ராசா அவர்கள் அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.
முதல்வரை ஓடுகாலி என திரு.சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மதிப்புமிகு கவிஞர் கனிமொழி அவர்கள் குறித்து பாஜகவை சார்ந்த திரு.எச்.ராஜாவும்,நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திரு.சீமான் அவர்களும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது. பாஜக ஆ. ராசா? திமுக எச்.ராஜா?என்ன வித்தியாசம் இருக்கிறது?' என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!”.. புதிய தலைமைச் செயலக திட்டத்துக்கு சீமான் எச்சரிக்கை!