அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
“கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!”.. புதிய தலைமைச் செயலக திட்டத்துக்கு சீமான் எச்சரிக்கை!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பட்டினப்பாக்கம் ஏற்கனவே கடும் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக இருப்பதாக குறிப்பிட்ட சீமான், அங்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் பகுதியைச் சுற்றியுள்ள 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் திட்டத்தால் மீனவ மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர் அமைப்புகளும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக!

மேலும், தமிழ்நாடு அரசு கடன் சுமையில் இருப்பதாகக் கூறிய சீமான், வட்டி செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய நிதி நெருக்கடி நிலவும் சூழலில், அவசரமாக புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிடாவிட்டால், 9 மீனவ கிராம மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் சீமான் எச்சரித்துள்ளார். “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம்” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ப்யூஸ் போன தவெக அரசு.. மின்வெட்டு விவகாரத்தில் அரசை விளாசிய உதயநிதி!