அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
"யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக!
திமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக வெற்றி கழகம் ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் "யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள் என விமர்சனம் செய்துள்ளது.
மிசா சட்டம் தொடர்பாகவும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், சில திமுக ஆர்ப்பாட்டங்களில் முதல்வர் விஜய்யை ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர்.
பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!
மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.
கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.
கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 12, 2026
இந்த நிலையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக வெற்றி கழகம் ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!
மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.
கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.
கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.