சூர்யா 47-ல் என்ன ஸ்பெஷல்?… நாளை மாலை வெளியாகும் முக்கிய அப்டேட்!



Surya 47 update tomorrow

‘சூர்யா 47’ படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படமாக உருவாகி வரும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாளை (செப்டம்பர் 9) மாலை 6 மணிக்கு ‘சூர்யா 47’ படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளதால், சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அவரே தனது தயாரிப்பு நிறுவனமான 2டி மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார். 

இதையும் படிங்க: “திருமணம் இல்லாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும்” நடிகை ரம்யா அதிரடி கருத்து!

Surya 47

படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் இந்த சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ மூலம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மலையாள நடிகர் நஸ்லென் மற்றும் ஆனந்த ராஜ், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ஜித்து மாதவனுடன் இணைந்து உருவாகும் இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். 

இதனிடையே நாளை வெளியாகவுள்ள அப்டேட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. சூர்யாவின் புதிய தோற்ற போஸ்டர் வெளியாகுமா, கிளிம்ஸ் வீடியோ வெளியாகுமா அல்லது படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!