“திருமணம் இல்லாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும்” நடிகை ரம்யா அதிரடி கருத்து!



Divya shpanthana speech about marriage

தமிழில் ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா திருமணம் மற்றும் காதல் உறவு குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இவர் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் கால்தடம் பதித்துள்ளார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்ட ரம்யா, மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது திரைப்படம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

Divya shpanthana

இந்நிலையில், பத்திரிகையாளர் நபீலா ஜமால் உடனான நேர்காணலில் காதல், திருமணம் மற்றும் தனியாக வாழ்வது குறித்து ரம்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!

ஒருவருடைய வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது திருமண உறவு இருப்பதில்தான் உள்ளது என்ற அவசியமில்லை என அவர் கூறியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசு பெருளாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜா - ராமராஜன் கூட்டணி மீண்டும் ரெடி… ரசிகர்களை குஷிப்படுத்திய புதிய அறிவிப்பு!