“திருமணம் இல்லாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும்” நடிகை ரம்யா அதிரடி கருத்து!
ஆசை வார்த்தையில் சிக்கிய 15 வயது சிறுமி… கெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்ன?
பீகார் மாநிலம் பாட்னாவில், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அந்த இளைஞர் பாட்னாவில் உள்ள கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமியின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, நடந்த நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை தேடி வருகின்றனர்.மேலும், சிறுமி அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் கெஸ்ட் ஹவுஸுக்கும் சென்ற போலீசார், அதன் நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்.. 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!