சிறுவனிடம் அத்துமீறிய முத்தம்.. இளம்பெண் மீது பாய்ந்த வழக்கு!



Girl harassment to boy in pune

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர், சிறுவனிடம் பாலியல் நோக்கத்துடன் நடந்து கொண்டதாகக் கூறி, சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 21 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிறுவனுக்கும் சுமார் 8–9 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தொடர்பில் இருந்ததாகவும், இளம்பெண் சிறுவனை ஒரு கஃபேக்கு அழைத்துச் சென்று அத்துமீறி முத்தமிட்டுள்ளார்.

மேலும், பாலியல் உறவுக்கான நோக்கத்தில் சிறுவனிடம் அவர் நடந்து கொண்டதாகவும், பின்னர் சிறுவனை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுவன் மன உளைச்சலில் சோகமாக இருந்தாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆசை வார்த்தையில் சிக்கிய 15 வயது சிறுமி… கெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்ன?

harassment

இதனையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!