தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ ரிலீஸ்?… நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த முக்கிய தகவல்!



Mookuthi amman 2 release update

நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால், முதல் பாகத்தை இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி, அபிநயா, யோகி பாபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: நயன்தாரா என்னப்பா இப்படி ஆகிட்டாங்க? புகைப்படத்தைப் கண்டு மிரண்ட ரசிகர்கள்.. பின்னணி உண்மை இதோ..!!!

Mookuthi Amman 2

இந்நிலையில்‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தபடத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா 47-ல் என்ன ஸ்பெஷல்?… நாளை மாலை வெளியாகும் முக்கிய அப்டேட்!