என் பொண்ணு உயிரோட தான் இருக்கா...! நல்ல சகுனம்.. 2 நாட்களில் வரப்போகும் நல்ல செய்தி! செஞ்சி 7 வயது சிறுமி வழக்கில் தாய் அளித்த பகீர் வாக்குமூலம் !!!



hemalatha-missing-girl-search-villupuram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 2-ம் வகுப்பு மாணவி ஹேமலதாவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 11-ம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு வீட்டில் தூங்கிய நிலையில் மறுநாள் காலையில் காணாமல் போனார். பல நாட்களாகியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காததால், தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

200-க்கும் மேற்பட்ட காவலர்கள் தேடுதல் வேட்டை

ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இளைய மகளான ஹேமலதா, தனது பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அன்று இரவு தாயுடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் காலையில் காணாமல் போனது தெரியவந்தது. உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி போட்ட கிடுக்குப்பிடி விசாரணை! தாய், பாட்டி சொன்னதை வைத்து கண்டுப்பிடிக்கும் மர்மம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் அதிகாரிகள்..!!!

இதையடுத்து, மாவட்டக் காவல்துறை சார்பில் நான்கு டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்ட எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. டிரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள வீடுகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேடுதல் நடத்தப்பட்டது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

காவல்துறையின் தேடுதல் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால், வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழகக் காவல்துறை உத்தரவிட்டது. சிபிசிஐடி எஸ்.பி. ஜவஹர் தலைமையிலான குழுவினர் ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று, சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட ஏற்கெனவே விசாரிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

சந்தேகத்திற்குரிய நபர்களைச் சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும், வழக்கில் முக்கியத் தடயம் கிடைத்ததாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதனால், சிறுமி மாயமானதற்கான காரணத்தைக் கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்கிறது.

கூடுதல் அதிகாரிகள் விசாரணையில் இணைப்பு

ஹேமலதா மாயமான விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. காவல்துறையின் விசாரணை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேடுதல் மற்றும் விசாரணைப் பணிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

மகள் காணாமல் போய் பல நாட்கள் கடந்தும், அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பெற்றோர் காத்திருக்கின்றனர். கோயிலில் பூ போட்டுப் பார்த்ததில் நல்ல சகுனம் கிடைத்ததாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நல்ல செய்தி வரும் எனக் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்ததாகவும் சிறுமியின் தாய் கூறியுள்ளார். எனினும், ஹேமலதா இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. சிறுமியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: 16 நாட்கள் ஆகிட்டு... செஞ்சி 7 வயது சிறுமி வழக்கில் பெங்களூருக்கு பறக்கும் சிபிசிஐடி அதிகாரிகள்! இப்போ வேற ரூட்டில் விசாரணை.... அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி..!!!!