கனவுகளுடன் காத்திருந்த திருமணம்.. திடீரென வந்த போன் கால்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!



Bride suicide in vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, திருமணம் நடைபெற இருந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியைச் சேர்ந்த விநாயகம்–அலமேலு தம்பதியின் மகள் ஸ்ரீதர்ஷினி (வயது 20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீதர்ஷினிக்கு பெற்றோர் திருமணம் பேசி முடித்திருந்தனர். நாளை திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற இருந்ததால், இரு குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தகாத உறவு விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கே நேர்ந்த கொடூரம்? ஆலங்காயத்தில் அதிர்ச்சி!

இந்த நிலையில், ஸ்ரீதர்ஷினியை ஏற்கெனவே காதலித்து வந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர், அவரது திருமணம் குறித்து அறிந்து செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதர்ஷினி, வீட்டில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

thirupathur

இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே தற்கொலை செய்துக் கொண்ட செல்போனை ஆய்வு செய்ததில் , மாணவியை காதலித்ததாகக் கூறப்படும் இளைஞர் மிரட்டும் வகையில் பேசியதாகவும், இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இரவில் ஆடையின்றி சுற்றிய கணவன்-மனைவி… வினோத நடவடிக்கையால் அதிர்ந்த கிராமம்!