ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
தகாத உறவு விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கே நேர்ந்த கொடூரம்? ஆலங்காயத்தில் அதிர்ச்சி!
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் விவசாயக் கிணற்றில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பொத்தூர் பகுதியில் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம், சடலங்களைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலறிந்து வந்த ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து 5 வயது மற்றும் 2 வயது சிறுவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இரவில் ஆடையின்றி சுற்றிய கணவன்-மனைவி… வினோத நடவடிக்கையால் அதிர்ந்த கிராமம்!
சுமார் 6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஜமுனாமத்தூர் வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு–சிவகாமி தம்பதியின் மகன்களான 5 வயது பிரதாப் மற்றும் 2 வயது பிரேம்குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவர்களின் தாய் சிவகாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சிவகாமிக்கும் ராஜாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், குழந்தைகள் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தன்று சிவகாமி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறைவான விவசாயக் கிணற்றுக்கு சென்றதாகவும், அங்கு குழந்தைகளை கிணற்றில் தள்ளியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தகாத உறவு விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கே நேர்ந்த கொடூரம்? ஆலங்காயத்தில் அதிர்ச்சி!இதனைத் தொடர்ந்து சிவகாமி மற்றும் ராஜா இருவரையும் போலீசார் கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆலங்காயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலன் கூறிய ஒரே வார்த்தை கேட்டு.. 2 பிள்ளைகளுக்கும் பெத்த தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்...!!!