தந்தை–மகன் இடையே குடும்பத் தகராறு.. தந்தையால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஒடிசாவில் அதிர்ச்சி!



Father killed son in odisha

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தையே தனது மகனை கத்தியால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்ரக் கிராமப்புற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுனிதா கிராமத்தைச் சேர்ந்தவர் ரபி சாஹு. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கும் அவரது மகன் பிகாஷ் சாஹுவுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ரபி சாஹு, தனது மருமகளை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு, மகன் பிகாஷை கூர்மையான கத்தியால் தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பிகாஷை குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பிகாஷ் உயிரிழந்தார்.

odisha

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, பிகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரபி சாஹுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவத்தில் குடும்பத் தகராறு கொலைக்கான முக்கிய காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தையே மகனை கத்தியால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் சுனிதா கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடிகார மகனின் கொடுமை.. பெற்றோர், சகோதரன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!