வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்... கதவை உடைத்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்சவள்ளி (வயது 38) என்ற பெண், கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அம்சவள்ளியைத் தேடி வந்தனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அம்சவள்ளியின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கடைசியாக தேனியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டரான அப்துல் ரகுமான் (வயது 36) என்பவரிடம் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ரகுமானிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, அப்துல் ரகுமான் வசித்து வந்த வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சாக்கு மூட்டையில் அம்சவள்ளியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிவேகத்தில் எமனாக வந்த சிறுவன்.. ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நொடியில் நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி.!

இறந்த பெண்ணின் அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தன. அருகிலேயே அப்துல் ரகுமான் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்துல் ரகுமானை கைது செய்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், செல்போன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அம்சவள்ளிக்கும் அப்துல் ரகுமானுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அப்துல் ரகுமான் கல்லால் அம்சவள்ளியின் தலையில் தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் உடலை வெளியே எடுத்துச் செல்ல முடியாமல், சாக்கு மூட்டையில் கட்டி வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளார். அதன்பிறகு சுமார் 3 நாட்கள் உடலுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்.. காதலனின் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்.. திருப்பூரில் பரபரப்பு!