அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்.. காதலனின் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்.. திருப்பூரில் பரபரப்பு!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா (வயது 36) கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகளை அரியலூரில் உள்ள பெற்றோரிடம் விட்டுவிட்டு, வேலைக்காக திருப்பூர் வந்த ராதிகா, பெரிச்சிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.
அப்போது, வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி அருண்குமார் (வயது 36) என்பவருடன் ராதிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், ராதிகா வேறு ஒரு நபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வருவதாக அருண்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ராதிகா கடந்த சில நாட்களாக அருண்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராதிகாவை அருண்குமார் செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் தொடர்ந்து பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நேரடியாக ராதிகாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: தகாத உறவு விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கே நேர்ந்த கொடூரம்? ஆலங்காயத்தில் அதிர்ச்சி!

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அருண்குமார் ராதிகாவை தாக்கியதில் அவர் நிலைதடுமாறி அருகில் இருந்த மரக்கட்டிலில் ராதிகாவின் தலை மோதி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த ராதிகாவின் கழுத்தை அருண்குமார் நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் கதவு திறந்திருந்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, ராதிகா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.!