நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.!
கள்ளக்காதலன் கள்ளக்காதலியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தம்பதி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பி.பி. அஹ்ரகாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 31). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தினேஷின் மனைவி சுகுணா (வயது 26). தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதனிடையே, அங்குள்ள இஸ்மாயில் மைதீன் வீதியில் வசித்து வருபவர் தவுபீக் (வயது 28). இவர் கூலித் தொழிலாளி ஆவார்.
இதையும் படிங்க: சொந்த வீட்டில் கைவைத்த இளைஞர்.. காதலியுடன் சொகுசு உல்லாசம்.. நடந்த சம்பவம் என்ன?
கள்ளத்தொடர்பு:
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் பல நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக 2 முறை கருங்கல்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் கள்ளக்காதல் ஜோடியை அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

மயக்கம்:
இதனிடையே, சம்பவத்தன்று மதிய நேரத்தில் இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கி இருந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுகுணாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து vanthanar.
கொலை:
அப்போது, சுகுணா கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதாவது, திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வரும் தவுபீக் வீட்டுக்கு நேற்று சுகுணா சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் ஆத்திரமடைந்த தவுபீக் சுகுணாவின் கழுத்தை நெரித்ததில் avar மயங்கி விழுந்துள்ளார். பின் மயக்கத்தில் இருந்தவரை சாலையோரம் இழுத்துச் சென்று விட்டுவிட்டு தவுபிக் தப்பியது அம்பலமானது. கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட பெயிண்டர்.. விசாரணையில் வெளியான பகீர் உண்மை.. கள்ளக்காதல் மோகம் உயிர்பறித்த சோகம்.!