நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
சொந்த வீட்டில் கைவைத்த இளைஞர்.. காதலியுடன் சொகுசு உல்லாசம்.. நடந்த சம்பவம் என்ன?
தந்தையின் லாக்கரில் இருந்த பணத்தை திருடி இளைஞர் காதலியுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
தொழிலதிபர்:
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்காட் பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், கடந்த 11 ம் தேதி குடும்பத்தினர் வெளியே சென்றுள்ளனர். அச்சமயம், படுக்கை அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 50 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தன.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட பெயிண்டர்.. விசாரணையில் வெளியான பகீர் உண்மை.. கள்ளக்காதல் மோகம் உயிர்பறித்த சோகம்.!
விசாரணை:
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அப்போது, தொழிலதிபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தான் இவ்வாறான குற்றத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிக்கிய மகன்:
இதனால் குடும்பத்தினரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தொழிலதிபரின் மகன் யாஷ் தனுஸ்கா அகர்வால் (வயது 25) கைது செய்யப்பட்டார். இவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த்தபோது, இவர் குஜராத்தில் தங்கி இருப்பது உறுதியானது. அங்கு சென்ற காவல்துறையினர் யாஷை கைது செய்தனர்.

காதலிக்கு செலவு:
யாஷிடம் நடந்த விசாரணையில், திருட்டு பணத்தில் காதலியான பூபாலி தத்தாவுக்கு ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடைய ஐபோன், நட்சத்திர விடுதியில் காதலியுடன் உல்லாச வாழ்க்கை என இருந்தது தெரியவந்தது. மேலும், நண்பர்கள் இருவரின் பேச்சைக்கேட்டு பூட்டு தயாரிப்பாளர் உதவியுடன் திருட்டு சம்பவத்தை யாஷ் அரங்கேற்றியது உறுதியானதால், தலைமறைவாக இருக்கும் அவரின் நண்பர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்தில் வந்த கசப்பு.. கள்ளக்காதல் வயப்பட்டு விபரீதம்.. விசிக பிரமுகர் கொலை வழக்கில் பகீர் தகவல் அம்பலம்.!