காதல் திருமணத்தில் வந்த கசப்பு.. கள்ளக்காதல் வயப்பட்டு விபரீதம்.. விசிக பிரமுகர் கொலை வழக்கில் பகீர் தகவல் அம்பலம்.! 



Love Marriage Turns Tragic: Illicit Affair Leads to VCK Functionary’s Murder, Shocking Details Emerge

கள்ளக்காதல் மோகத்தால் காதல் கணவரின் உயிருக்கு எமனான மனைவியின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.  

விசிக பிரமுகர்: 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், ஓரங்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் இளையராஜா (வயது 39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில், ஓரங்கூர் முகாம் செயலாளராக பணியாற்றி வருகிறார். இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா (வயது 30). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். 

இதையும் படிங்க: உன்னோட ஆபாச வீடியோ இருக்கு.. லீக் பண்ணவா? விபரீத முடிவெடுத்த பெண்.. பெண்களே உஷார்.! 

கள்ளக்காதல்: 

தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி இளையராஜா வீட்டின் அருகில் இருக்கும் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக சிறுபாக்கம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலமானது. 

Crime news

சித்தி மகன்: 

அதாவது, இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா - இளையராஜாவின் சித்தி மகன் வெங்கடேசன் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்த விஷயம் செல்போன் பதிவுகள் மூலமாக அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இளையராஜா - வெங்கடேசன் ஒன்றாக மதுபானம் அருந்தி இருக்கின்றனர். 

தகராறு: 

அப்போது, இளையராஜா வெங்கடேசனிடம் மனைவியுடன் கள்ளக்காதல் உறவில் இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் இளையராஜாவை தாக்கிய நிலையில், அவர் மயங்கி விழுந்துள்ளார். பின் இளையராஜாவை காரில் ஏற்றி இரவு முழுவதும் ஊரூராக சுற்றிய நிலையில், பின் கிணற்றில் வீசி இருக்கிறார். 

Crime news

விசாரணை: 

இளையராஜாவின் கொலை விவகாரத்தை கள்ளகாதலிக்கு தெரியப்படுத்தியவர், இளையராஜாவின் வாகனத்தை நண்பரை விட்டு எடுத்து வந்துள்ளார். இந்த உண்மையை அறிந்த காவல்துறையினர் வெங்கடேசன், அவரின் நண்பர் செல்வம், இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா ஆகியோரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: காதலியின் இறப்பு செய்திகேட்ட அடுத்த நொடியே விபரீத முடிவெடுத்த காதலன்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!