காதலியின் இறப்பு செய்திகேட்ட அடுத்த நொடியே விபரீத முடிவெடுத்த காதலன்.. கண்ணீரில் பெற்றோர்கள்.! 



Tragic End: Boyfriend Dies by Suicide After Learning of Girlfriend’s Death Near Ulundurpet

காதலி இறந்த செய்தி அறிந்த காதலனும் தற்கொலை செய்துகொண்டதால் சோகம் நிலவுகிறது. 

தற்கொலை: 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, எடைக்கல், பாலி கிராமத்தில் வசித்து வருபவர் கவிதாஸ் (வயது 26). இவர் டிராக்டர் ஓட்டுநர் ஆவார். நேற்று காலை சுமார் 8 மணியளவில், கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை, காட்டுப்பரூர் கிராமத்தில் உள்ள அண்ணாதுரையின் விவவசாய நிலத்தில் வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதையும் படிங்க: ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த மனைவி.. கணவன் செய்த பகீர் சம்பவம்.! வங்கி அருகில் கொடூரம்..!

Crime news

சடலம் மீட்பு: 

இதனிடையே, பாலி கிராமத்தில் வசித்து வரும் சாந்தி என்பவரின் உடன் பிறந்த சகோதரர் அழகுலிங்கத்தின் கிணற்றில் கிருஷ்ணவேணி (வயது 23) என்ற இளம்பெண் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, காதல் விவகாரம் தெரியவந்தது. 

Crime news

காதல்: 

அதாவது, கவிதாஸ் - கிருஷ்ணவேணி ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இளம்பெண் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு கிருஷ்ணவேணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 23 ம் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியேறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவல் கிடைத்த அரைமணிநேரத்திற்குள்ளாகவே, பாலி கிராமத்துக்கு வந்த காதலன் கவிதாசும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இந்த சம்பவம் இருதரப்பு உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: Sivaganga News: கத்திக்கு கத்தியால் பதில்.. சட்டக்கல்லூரி மாணவர் எடுத்த ஆயுதம் அவருக்கே எமனான சோகம்.. கொடூர கொலை..!