நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
பட்டம் விட்ட 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! 4 நாட்களுக்குப் பின் பெற்றோற்கு காத்திருந்த அதிர்ச்சி....!!!
டெல்லி ஜசோலா கிராமத்தில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் மிதுன், திறந்திருந்த வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன அவரை பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர். நான்கு நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறந்த சாக்கடையில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
பட்டம் விட்டபோது நேர்ந்த சோகம்
உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட மிதுனின் பெற்றோர், டெல்லியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று சிறுவன் ஜசோலா கிராமப் பகுதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக திறந்திருந்த வடிகாலில் தவறி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: வாய் பேச முடியாத மகனை எழுத்தால் பேசவைத்த பாசமிகு அன்புத்தாய்.. கல்வி கொடுத்த அசத்தல் ஐடியா..!
சிறுவனை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர், கடந்த சனிக்கிழமை முதல் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திறந்த சாக்கடையில் சிறுவனின் உடல் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரி மீது மாநகராட்சி நடவடிக்கை
சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, வடிகால் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தென்கிழக்கு மத்திய மண்டலத்தைச் சேர்ந்த இளநிலைப் பொறியாளர் ஒருவரை டெல்லி மாநகராட்சி உடனடியாக பணி இடைநீக்கம் செய்தது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திறந்த வடிகால்களை மூட மக்கள் கோரிக்கை
பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் வடிகால்களால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் திறந்த சாக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திறந்த வடிகால் விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நான்கு நாட்களாக மகனைத் தேடிய பெற்றோருக்கு அவரது உடல் சடலமாக கிடைத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி இதுபோன்ற சிறுவர் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: என்னம்மா பண்ற.... ராகுல் காந்திக்கு திடீரென முத்தம் கொடுத்த மாணவி...! கொதித்தெழுந்த பாஜக... காங்கிரஸ்ஸின் தரமான பதிலடி...!!!