என்னம்மா பண்ற.... ராகுல் காந்திக்கு திடீரென முத்தம் கொடுத்த மாணவி...! கொதித்தெழுந்த பாஜக... காங்கிரஸ்ஸின் தரமான பதிலடி...!!!



rahul-gandhi-pune-student-kiss-video

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’ இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிவில் மேடையில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மாணவி ஒருவர், திடீரென ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்தக் காட்சி தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ராகுல் காந்தியிடம் அந்த மாணவி எந்தவித தயக்கமும் இல்லாமல் இயல்பாக பழகிய காட்சியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நெருக்கத்தையும், பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழலையும் இது வெளிப்படுத்துவதாக சில இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடுக்கடலில் மீனவர்க்கு நடந்த அதிர்ச்சி! முகத்தை மூடிய 8 கரங்கள்.... மூச்சு கூட விட முடியல! திக் திக் வீடியோ..!!!

பெண்கள் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துகள்

நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘மனுஸ்மிருதி’யில் இடம்பெற்றுள்ள சிந்தனைகளை கடுமையாக விமர்சித்தார். பெண்களை கட்டுப்படுத்தும் ஆணாதிக்க மனநிலையை உடைத்தெறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் நிகழ்ச்சியை சுற்றிய அரசியல் மோதல்

இதற்கிடையே, புனே நிகழ்ச்சி மகாராஷ்டிர அரசியலிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் நிகழ்ச்சி ஒரு ‘அரசியல் நகைச்சுவை நாடகம்’ என்று பாஜக விமர்சித்ததுடன், கூட்டத்தை அதிகமாகக் காட்டுவதற்காக மாணவர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

பாஜகவின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பாஜக கலக்கமடைந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால், நிகழ்ச்சியில் நடந்த ஒரு சில நிமிட காட்சியைத் தாண்டி, ராகுல் காந்தியின் புனே பயணம் மகாராஷ்டிராவில் புதிய அரசியல் வார்த்தைப்போருக்கும் காரணமாகியுள்ளது.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு அட்டூழியமா? தரையில் கிடக்கும் மாவை உடம்பால் உருட்டும் தொழிலாளி...! அதிர்ச்சி வீடியோ!!!