நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
உன்னோட ஆபாச வீடியோ இருக்கு.. லீக் பண்ணவா? விபரீத முடிவெடுத்த பெண்.. பெண்களே உஷார்.!
பெண்ணின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக மர்ம நபர் மிரட்ட, பயந்துபோன பெண்மணி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
தம்பதி:
சென்னையில் உள்ள விருகம்பாக்கம், சாலிகிராமம், மதியழகன் தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது 30). இவர் தனியார் நிறுவன மேலாளர் ஆவார். இவரின் மனைவி ரட்ஸிதா (வயது 27). தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: காதலியின் இறப்பு செய்திகேட்ட அடுத்த நொடியே விபரீத முடிவெடுத்த காதலன்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
மர்ம நபர்:
இதனிடையே, ரட்ஸிதாவை போனில் நேற்று முன்தினம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னிடம் பெண்ணின் ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதனை கணவருக்கு அனுப்பி விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
கணவரிடம் தகவல்:
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுதொடர்பாக கணவரிடம் தெரிவித்து இருக்கிறார். அவர் மனைவியிடம் கவலைப்பட வேண்டாம் எனக்கூறி ஆறுதல் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனிடையே, மனைவிக்கு நேற்று இரவில் கணவர் தொடர்புகொண்டபோது அழைப்பு எடுக்கப்படவில்லை.

தற்கொலை:
இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன் வீட்டின் உரிமையாளருக்கு உடனடியாக தொடர்புகொண்டு, வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு வேண்டி இருக்கிறார். அவர் வீட்டுக்குள் சென்றபோது வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்த்துள்ளது. கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்காத காரணத்தால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது பெண் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
விசாரணை:
பின் இதுதொடர்பாக பெண்ணின் கணவர் & காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த காவல்துறையினர் ரட்ஸிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த மனைவி.. கணவன் செய்த பகீர் சம்பவம்.! வங்கி அருகில் கொடூரம்..!