அதிவேகத்தில் எமனாக வந்த சிறுவன்.. ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நொடியில் நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி.! 



17-Year-Old Riding Bike Causes Fatal Accident in Theni; Woman Dies in Tragic Crash

17 வயது சிறுவனால் பெண் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

இருசக்கர வாகனம்: 

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் குமார் (வயது 48). இவர் உணவு ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரின் மனைவி சூர்யா (வயது 35). தம்பதிகள் இருவரும் நேற்று முன்தினம் இரவில் உறவினரின் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. நண்பர்கள் பலி., உற்சாக பயணத்தில் நேர்ந்த விபரீதம்.! 

விபத்து: 

பின் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். கம்பம் யுவராஜா திரையரங்கம் அருகில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், இவர்களின் ஸ்கூட்டர் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தில் கீழே விழுந்த சூர்யா மீது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து ஏறி இறங்கியது. 

accident

மரணம்: 

இந்த சம்பவத்தில் சூர்யா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த சதீஷ் குமார் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த கம்பம் தெற்கு காவல்துறையினர், இருசக்கர வாகனம் இயக்கி வந்த 17 வயது சிறுவன் மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிவா (வயது 25) ஆகியோரின் மீது வழக்குப்பதிவு seithu விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: Madurai News: விமானத்தை பார்க்கும் ஆசையில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. துள்ளத்துடிக்க பலி.!