ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..!
சென்னை: காலை உணவில் விழுந்த பல்லி.. 19 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!
அரசு உதவிபெறும் பள்ளியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை உணவு:
தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாங்காடு தனியார் உணவுக்கூடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு, பூந்தமல்லி, திருமழிசை உட்பட 12 இடங்களில் செயல்படும் பள்ளிக்கு உணவு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கல்யாணம் பண்ணிக்கலாம்.. இளைஞரிடம் ஆசையாக பேசி ரூ.14 லட்சம் கறந்த இளம்பெண்.!
பொங்கல்:
இதன் மூலமாக சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பலன்பெறுகின்றனர். இதனிடையே, பூந்தமல்லி சிவன் கோயில் தெருவில் செயல்படும் அரசு உதவிபெறும் இந்து அரசு ஆரம்ப பள்ளியில், நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. உணவாக பொங்கல் பரிமாறப்பட்டது.
பல்லி:
இந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோதே, உணவில் உயிரிழந்த பல்லியை கண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக உணவு விநியோகத்தை நிறுத்தி, உணவு சாப்பிட்ட 11 குழந்தைகளையும் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வாந்தி-மயக்கம்:
இதனிடையே, பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் பள்ளியில் 6 மாணவர்களுக்கும், கில்மா நகர், குமணன் சாவடி உருது பள்ளி மாணவர்கள் என அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்தால் மாணவர்கள் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகி இருக்கின்றார்.
பதறிய பெற்றோர்:
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் பதறியபடி மருத்துவமனைக்கு வந்தனர். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் வாக்குவாதமும் செய்தனர். பின் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து அவர்கள் அமைதியாகினர். இவர்களில் ஒரு மாணவர், மாணவி என 2 பேர் கடுமையான வயிற்று வலியுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.. எமனான காதல்..!