த்ரிஷாவால் குடும்பவே திணறுது ... சங்கீதாவைச் சமாதானப்படுத்த லண்டன் பறந்த விஜய்யின் பெற்றோர்...! கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான குடும்பப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியினர் லண்டனில் சங்கீதாவை நேரில் சந்தித்து சமரசம் பேச திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், லண்டனில் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கீதாவை சந்திக்க திட்டமிட்ட விஜய்யின் பெற்றோர்
சங்கீதா ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, குடும்பப் பிரச்னையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பிலும் முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, விஜய் - த்ரிஷா இடையேயான நட்பைச் சுற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் என தகவல்கள் பரவின.
இதையும் படிங்க: நட்பால் நண்பருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது! விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா அதிரடி கருத்து!
இதையடுத்து, லண்டனில் தங்கியிருந்த சங்கீதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியினர் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்தச் சந்திப்பு நடைபெற்றால் குடும்பத்தில் நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
பார்முலா கார் பந்தயத்தில் நடந்த சந்திப்பு
இந்தச் சூழலில், லண்டனில் நடைபெற்ற பார்முலா கார் பந்தய நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் RedAnt பந்தய அணிக்கு வாழ்த்து தெரிவிக்க விஜய் சென்றார். அங்கு நடிகை த்ரிஷாவும் வந்திருந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், லண்டனில் த்ரிஷா, விஜய் மற்றும் ராதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதனால் ஏற்கனவே பேசப்பட்டு வந்த குடும்ப விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்தது.
சமரசப் பேச்சுக்கு சங்கீதா மறுப்பு?
த்ரிஷாவுடனான இந்தச் சந்திப்பு மற்றும் புகைப்படங்களால் சங்கீதா அதிருப்தியடைந்ததாகவும், இதையடுத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் பெற்றோர் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சமரச முயற்சி எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக இரு குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் குடும்பப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தேவையில்லாத அரசியலை ஏன் பேச வேண்டும்? விஜய் சேதுபதியை சாடிய அம்பிகா!