லண்டனில் நள்ளிரவில் வந்த அவசர போன்கால்! சீக்ரெட் வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த முதல்வர் விஜய்.... பின்னணியில் உள்ள அந்த முக்கிய புள்ளி.! சென்னை திரும்பியதும் அடுத்த சம்பவம்!!!



vijay-tirumavalavan-alliance-controversy

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், அங்கிருந்தபடியே மாநில அரசியல் மற்றும் நிர்வாக நகர்வுகளை தொடர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் இரவு நேரங்களில் தமிழக உளவுத்துறை உயரதிகாரியுடன் தொலைபேசியில் பேசி, முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் கேட்டறிந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமாவளவன் பேச்சு.. லண்டனுக்குச் சென்ற தகவல்

சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்தும், கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என தான் வலியுறுத்தியது குறித்தும் பேசியிருந்தார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வெற்றி மட்டும் பத்தாது... இடைத்தேர்தலில் தவெகவின் தரமான இலக்கு இதுதானாம்! முதல்வர் விஜய்யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.... திமுக-அதிமுக வுக்கு நேரடி சவால்..!!!

இதுதொடர்பான தகவல்களுடன், திருமாவளவனின் பேச்சு இடம்பெற்ற வீடியோவும் லண்டனில் இருக்கும் விஜய்யிடம் தமிழக உளவுத்துறை அதிகாரி உடனடியாக பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் விஜய் கவனம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி விவகாரத்தில் விஜய் அதிருப்தி?

வீடியோவை பார்த்த விஜய், தனது செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இலாகா மாற்றம் தொடர்பான கோரிக்கை தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவே திருமாவளவன் இவ்வாறு பேசியுள்ளாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சில விஷயங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அதற்கு முரணான கருத்துகள் பொதுவெளியில் தெரிவிக்கப்படுவது குறித்தும் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பியதும் கூட்டணித் தலைவர்களிடம் சில முக்கிய முடிவுகளை கண்டிப்புடன் தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை திரும்பியதும் முக்கிய ஆலோசனை

தனிப்பட்ட அரசியல் பேச்சாக மட்டும் இதைப் பார்க்காமல், கூட்டணி கட்சிகள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் முறையில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்திலும் தமிழக அரசியல் நகர்வுகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சென்னை திரும்பிய பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, திருமாவளவன் பேச்சு தொடர்பாக விஜய் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: இந்த அதிருப்தியால் தவெக அரசியல்கே ஆப்பு! அதிரடியாக களத்தில் இறங்கிய முதல்வர் விஜய்...! ஒரே மேடையில் ஆல் இன் ஆல் தலைவர்கள்... தமிழகத்தை அதிரவைக்கப்போகும் தவெகவின் மெகா பொதுக்கூட்டம்..!!!