வெற்றி மட்டும் பத்தாது... இடைத்தேர்தலில் தவெகவின் தரமான இலக்கு இதுதானாம்! முதல்வர் விஜய்யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.... திமுக-அதிமுக வுக்கு நேரடி சவால்..!!!



vijay-tvk-by-election-test

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலை தனது அரசியல் பயணத்தில் முக்கியமான டெஸ்டிங் களமாக விஜய் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன், திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தவெக தலைமையின் முக்கிய இலக்காக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தேர்தல் பணிகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இந்த அதிருப்தியால் தவெக அரசியல்கே ஆப்பு! அதிரடியாக களத்தில் இறங்கிய முதல்வர் விஜய்...! ஒரே மேடையில் ஆல் இன் ஆல் தலைவர்கள்... தமிழகத்தை அதிரவைக்கப்போகும் தவெகவின் மெகா பொதுக்கூட்டம்..!!!

இரு தொகுதிகளிலும் வெற்றியே இலக்கு

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்றும், எதிரணியினரை டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு வலுவான தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தவெகவின் அரசியல் பலத்தை நேரடியாக நிரூபிக்க முடியும் என அக்கட்சி கருதுகிறது.

கடந்த கால அரசியல் தலைவர்களின் செல்வாக்கை மட்டும் நம்பாமல், தங்களுக்கென தனியான வாக்கு தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதற்கான முதல் பெரிய வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

திமுக, அதிமுகவுக்கு நேரடி சவால்

தவெகவின் அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்த திமுகவும் அதிமுகவும் தனித்தனி தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இரு கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் தவெக ஏற்படுத்தும் தாக்கம் இந்தத் தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்படும்.

இதனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் முடிவுகள் வெறும் இடைத்தேர்தல் முடிவாக மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் தவெக செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கான முக்கிய அளவுகோலாகவும் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு பிளானா..? லண்டனில் சந்தித்த விஜய் -அஜித்...! பின்னணியில் நடந்த மாபெரும் மாஸ்டர் பிளான்...!!!