24 நாட்கள் கடந்து கடலூரில் கிடைத்த துப்பு...! நள்ளிரவில் கடந்த லாரிகளை தூக்கிய சிபிசிஐடி...! செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!!



hemalatha-missing-case-cbcid-search-f7nbp9

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீசார் விரிவுபடுத்தியுள்ளனர். உள்ளூர் போலீசாரின் 10 நாள் தேடுதலில் எந்தத் தடயமும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது கடலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரங்களில் மாயம்

செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி நள்ளிரவில் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களில் காணாமல் போனார். இதையடுத்து உள்ளூர் போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தினர். ஆனால், சிறுமி அணிந்திருந்த துணிகள் அல்லது செருப்புகள் உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: 23 நாட்கள் ஆகிட்டு... காட்டுக்குள் அரவிந்திடம் நடந்த நள்ளிரவு விசாரணை! அடுத்தடுத்து சிக்கிய அதிர்ச்சி உண்மைகள்... செஞ்சி சிறுமி வழக்கில் புதிய திருப்பம்!!!

இதனால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ரகசியத் தகவல்கள் மற்றும் செல்போன் டவர் தரவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் தனிப்படை விசாரணை

சிபிசிஐடி அதிகாரிகள் திரட்டிய தகவல்களின் அடிப்படையில், புலனாய்வுத் தனிப்படையினர் கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர் . சிறுமியின் உருவ ஒற்றுமை கொண்ட குழந்தை யாரேனும் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்பதையும், சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகள் மற்றும் காப்பகங்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். சில அதிகாரிகள் மாறுவேடத்திலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சிறுமி மாயமான நள்ளிரவு நேரத்தில் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற லாரிகள் மற்றும் அவற்றின் ஓட்டுநர்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் முக்கியமான லாரி போக்குவரத்து மையமாக இருப்பதால், அங்கு சட்டவிரோத குழந்தை விற்பனை தொடர்பான இடைத்தரகர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகின்றனர்.

600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் ஆய்வு

ஆலம்பூண்டி பகுதியில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் பதிவான 600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில எண்கள் கடலூர் மற்றும் நாமக்கல் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சைபர் கிரைம் பிரிவினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, 'எங்கள் குழந்தையைக் கண்டுபிடித்துத் தாருங்கள்' என ஹேமலதாவின் தாய் பவானி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். 24 நாட்களைக் கடந்தும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், சிபிசிஐடியின் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் கிடைக்கும் தகவல்கள் வழக்கில் புதிய தடயங்களை அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 

இதையும் படிங்க: தயவு செய்து தேவையில்லாத பேச்சு பேசாதீங்க..! எங்களுக்கு பணம் வேண்டாம்.. எங்க மகளை மீட்டு கொடுத்தாலே போதும்! கண்ணீர்விட்டு கதறிய செஞ்சி சிறுமியின் தாய்..!!!