ஒரு நொடியில ஒரு உயிர் போச்சே! கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்! 18 வயது இளைஞர் பரிதாப பலி... பகீர் சிசிடிவி காட்சி..!!!
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் கார் ஒன்று கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார். காரில் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார். தர்மாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட பாப்ளி பாட்டா அருகே புதன்கிழமை மாலை நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கட்டுப்பாட்டை இழந்த கார்.. லாரி மீது மோதல்
ஸ்ரீநாத் கங்காதர் யெவதிவாட் (18), தன்ராஜ் மீனாஜி லக்மாவாட் (20) ஆகிய இருவரும் மாருதி சுசுகி டிசையர் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே கண்டெய்னர் லாரி வந்துள்ளது. லாரியைப் பார்த்ததும் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சறுக்கி, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் காரில் இருந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.
18 வயது இளைஞர் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநாத் கங்காதர் யெவதிவாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த தன்ராஜ் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
விபத்து நடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தர்மாபாத் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Nanded,Maharashtra - An 18-year-old youth lost his life and another person sustained serious injuries following a horrific head-on collision between a car and a container truck near Babhli Phata in Dharmabad taluka of Nanded district on Wednesday evening. The entire crash was captured on a nearby CCTV camera.
— NextMinute News (@nextminutenews7) November 20, 2026
இதையும் படிங்க: அவனை பெட்ரோல் ஊத்தி எரிக்கணும்..! சொந்த உறவினரே 4 வயது சிறுமியை வயலுக்கு அழைத்துச் சென்று செய்த கொடூரம்! கொந்தளிக்கும் பெற்றோர்....!!!