அறியாமல் செய்த தவறு! தொடர்ந்து கேட்ட அசிங்க பேச்சு.... அப்பா, அம்மா சாரி! அவங்க டார்ச்சல் தாங்க முடியல... கடிதத்தில் கதறிய மாணவி. பின்னணியில் இருந்த கொடூர உண்மை.!!!



vasavi-engineering-student-shreya-suicide-note-allegati

வாசவி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஸ்ரேயா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர்களின் தொடர் அவமானப்படுத்தும் பேச்சுகள் மற்றும் மன அழுத்தமே இந்த முடிவுக்குக் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஸ்ரேயா எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்வு அறையில் செல்போன் எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட பிரச்சனை

தகவலின்படி, முதலாம் ஆண்டு தேர்வின் போது எதிர்பாராத விதமாக செல்போனை தேர்வு அறைக்குள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அது அறியாமல் நடந்த தவறு என்று மாணவி விளக்கம் அளித்தும், தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காலியாக இருந்த பேருந்து! கதவுகளை அடைத்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த நடத்துனர்!

தொடர்ந்த கேலி பேச்சால் மன அழுத்தம்?

இதையடுத்து இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய பின்னரும், சில பேராசிரியர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “வெட்கமும் மானமும் இல்லை”, “சில ஜென்மங்கள் மாறாது” போன்ற வார்த்தைகளால் வகுப்பறையிலேயே திட்டியதாகவும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு கேலி செய்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலை சுமார் மூன்று மாதங்களாக நீடித்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர் புகார்... விசாரணை தீவிரம்

மன அழுத்தத்தை தாங்க முடியாமல், “அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்... நான் இறக்கப் போகிறேன்” என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு ஸ்ரேயா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது மரணச் செய்தி கல்லூரி நிர்வாகத்துக்குத் தெரிந்தால் அவர்கள் வருத்தப்படாமல் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நம்பி நெருக்கமாக பழகியவனிடம் ஏமாற்றம்! அந்த வலி தாங்க முடியல... அந்த போட்டோ லீக் பண்ணிடுவேன்னு மிரட்டல்! உள்ளங்கையில் அந்த வார்த்தையை எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை! பார்த்து பார்த்து கதறித்துடிக்கும் தந்தை!!!