சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!
#BREAKING : சாத்தூர் அருகே பயங்கரம்.. பட்டாசு ஆலையில் அடுத்தடுத்து வெடி விபத்து!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து ஆலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கும் அபாயம் இருப்பதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா அல்லது காயமடைந்துள்ளார்களா என்பது குறித்து தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலை நேர பெண்களின் உடற்பயிற்சியின் போது ரகசிய வீடியோ எடுத்த வாலிபர்! செல்போன் சோதனையில் சிக்கிய... அதிர்ச்சி வீடியோ!!!
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். தற்போதைய நிலவரப்படி உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: K.N.நேரு தொடர்புடைய இடங்களில் ‘ரெய்டு’.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை!