1.5 கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே நடந்த அதிசயம்! மருத்துவர்களே ஆடிப்போன தருணம்... 12 சீட்டர் வேனுக்காக கையேந்தும் நிலைமையில் பெற்றோர்..!!!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 34 வயதான ஜெனிடார் நாமோனா, ஒரே பிரசவத்தில் உருவ ஒற்றுமை கொண்ட நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 28 வார கர்ப்பத்திலேயே சிசேரியன் மூலம் பிறந்த நான்கு ஒற்றுமை குழந்தைகள், தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களையே வியக்க வைத்த அபூர்வ பிரசவம்
எமிலி, ஹேரியட், கேத்தரின் மற்றும் அலெக்ஸா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நான்கு குழந்தைகளும் ஒரே கருமுட்டையிலிருந்து உருவானவை. எந்தவித செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையும் இல்லாமல் இவ்வாறு ஒரே மாதிரியான நான்கு குழந்தைகள் பிறப்பது சுமார் 1.5 கோடி நிகழ்வுகளில் ஒன்றாக மட்டுமே நிகழக்கூடிய மிக அரிய சம்பவம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நம்பவே முடியல.... 31 வயது பெண் 5 நாள் இடைவெளியில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம்! மருத்துவர்களே ஆடிப்போன அந்த தருணம்!!!
ஒரே நாளில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை இருமடங்கு
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், புதிய வரவால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-இலிருந்து 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியுடன் சேர்ந்து அன்றாட வாழ்க்கையிலும் பல புதிய சவால்கள் உருவாகியுள்ளன. மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு அனைவரும் ஒன்றாகச் செல்ல பழைய கார் போதாமல் இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பெரிய வேன் வாங்க நிதி திரட்டும் முயற்சி
10 முதல் 12 இருக்கைகள் கொண்ட வேன் வாங்குவது தற்போது குடும்பத்தின் அவசர தேவையாக மாறியுள்ளது. அதேபோல் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்குத் தேவையான டயப்பர்கள், பால் மாவு உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் ஜெனிடார் நாமோனா இணையதளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியை தொடங்கியுள்ளார். இந்த அபூர்வ பிரசவம் குறித்து அறிந்த பலரும் சமூக வலைதளங்கள் வழியாக குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மோனியா வாயு கசிவுக்கு இதுதான் காரணமா? பெரியபாளையம் இறால் ஆலையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!!!