“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
சட்டசபையில் ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய்! கருணாநிதி முதல் உதயநிதி வரை... கதறவிட்டு தவெக ஆற்றிய அனல் பறந்த 1 மணி நேர உரை...!!!
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் ஆற்றிய ஒரு மணி நேர பதிலுரை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. காலை 9.35 மணிக்கு தொடங்கிய அவரது உரை 10.35 மணி வரை நீடித்தது. இதில் பெண்களை தரக்குறைவாக பேசுவது, அரசியல் நாகரிகம், மக்கள் தீர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் கடுமையாக பேசினார். இந்த உரையின் பகுதிகள் தற்போது தவெக தொண்டர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பெண்களை அவமதிக்கும் பேச்சுக்கு எதிராக கடும் எச்சரிக்கை
அரசியல் ரீதியாக எதிரிகளை கடுமையாக விமர்சிப்பதில் தவறில்லை என்றும், அதற்காக தனிப்பட்ட முறையில் பெண்களை இழிவாக பேசுவதை ஏற்க முடியாது என்றும் விஜய் தெரிவித்தார். தமிழகத்தில் ஆபாசம் மற்றும் வன்மம் கலந்த பேச்சுகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், பெண்களை அவமதிப்பவர்கள் மீது சட்டம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதையும் படிங்க: CM விஜய்யின் அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ! கூட்டணிக்கு செக் வைக்க திட்டம்.... அதிரும் அரசியல் களம்!!!
திரைத்துறையிலும் அரசியலிலும் மக்கள் தனக்கு அளித்த இடத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பெண் என்ற முறையில் எதிர்கொண்ட அவமானங்களையும் நினைவுகூர்ந்த விஜய், இனி எந்த பெண்ணும் அதுபோன்ற சூழலை சந்திக்கக் கூடாது என்று கூறினார்.
‘எலும்பை உடைப்பேன்’ என மிரட்டுவதுதான் அரசியலா?
அரசியல் விமர்சனங்கள் காரசாரமாக இருப்பதில் பிரச்சினையில்லை என்ற விஜய், சட்டசபைக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மிரட்டும் வகையில் பேசுவது சரியா என கேள்வி எழுப்பினார். குறிப்பாக, “எலும்பை உடைப்பேன்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது அரசியல் நாகரிகமா என்றும் அவர் சாடினார். இதுபோன்ற பேச்சுகளுக்கு மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தல்
தேர்தலில் வாக்களிக்காத மக்களைப் பார்த்து “நல்ல சாவே வராது” என கூறப்பட்டதாக சுட்டிக்காட்டிய விஜய், பல ஆண்டுகளாக வாக்களித்து வரும் மக்களிடம் இப்படிப் பேசுவது எப்படி நியாயமாகும் என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் அரசியலில் ஏன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டார்.
முந்தைய தலைமுறை அரசியலில் இருந்த நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பழைய அரசியல் சம்பவங்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார். “நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள்” என்று பழைய வரலாற்றை மட்டும் பேசாமல், இன்றைய அரசியலில் நடப்பதையும் மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் நாகரிகம் குறித்து அவர் முன்வைத்த கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.