“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
எலும்பை உடைப்பேன்! நல்ல சாவே வராதா? என்ன பேச்சு இதெல்லாம்... சட்டமன்றத்தில் ஆவேசப்பட்ட முதல்வர் விஜய்...!!!
தமிழக சட்டமன்றத்தில் அரசியல் பேச்சுகளின் கண்ணியம் தொடர்பாக முதல்வர் விஜய் கடும் கருத்துகளை பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எல்லை இருக்க வேண்டும் என்றும், வாக்களித்த மக்களை அவமதிக்கும் வகையில் பேசக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல் கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தில் இயல்பானவை என்றாலும், அதற்கான சொற்களில் நாகரிகம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானம் மீண்டும் கூடாது
சட்டமன்ற வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்தித்த அவமானகரமான சூழல்களையும் முதல்வர் விஜய் தனது உரையில் சுட்டிக்காட்டினார். அத்தகைய நிலை இனி எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: CM விஜய்யின் அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ! கூட்டணிக்கு செக் வைக்க திட்டம்.... அதிரும் அரசியல் களம்!!!
தொழில்நுட்பமும் சமூக நாகரிகமும் வளர்ந்துள்ள நிலையில், ‘எலும்பை உடைப்பேன்’ போன்ற வன்முறையை தூண்டும் வார்த்தைகளுக்கும் தனிநபர் தாக்குதல்களுக்கும் அரசியலில் இடமிருக்கக் கூடாது என்றார். அரசியல் பேச்சு என்பது கருத்துரிமைக்குள் வந்தாலும், அதற்கும் சில கண்ணியமான வரம்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்களிக்காத மக்களுக்கு சாபமிடுவதா?
தேர்தலில் வாக்களிக்காத மக்களை பார்த்து, ‘நல்ல சாவே வராது’ என்ற தோனியில் மூத்த அரசியல்வாதி ஒருவர் பேசியதை முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்தார். பல ஆண்டுகளாக அதே மக்களிடம் ஆதரவு பெற்று அரசியலில் இருந்தவர்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர்களையே அவமதிப்பது ஏற்க முடியாதது என அவர் கூறினார்.
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள், எதிர்காலத்தில் அதே மக்களின் ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் விருப்பத்தை மதிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை எனவும் வலியுறுத்தினார்.
கடந்த காலத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த வேண்டாம்
அவதூறான அல்லது ஆபாசமான பேச்சுகளை, ‘அந்த காலத்திலேயே இப்படித்தான் பேசினோம்’ என்று நியாயப்படுத்துவதையும் விஜய் சாடினார். பழைய அரசியலில் இருந்த நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்; அநாகரிகமான பேச்சுகளை ஏன் தொடர்ந்து கொண்டு வர வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இனிவரும் காலங்களில் அரசியல் களம் நாகரிகமான பாதையில் செல்ல வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என சட்டமன்றத்தில் அவர் தெளிவுபடுத்தினார். மக்களின் தீர்ப்பு மீது மதிப்பு வைத்து, விமர்சனங்களையும் மாற்றுக்கருத்துகளையும் கண்ணியத்துடன் முன்வைக்க வேண்டும் என்பதையும் தனது உரையின் மூலம் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அவசர நடவடிக்கையால் அரசியலில் பரபரப்பு! தவெக செக் வைக்கும் முக்கிய தொகுதிகள்.... அம்பலமான சீக்ரெட் பிளான்!!!