BREAKING: தள்ளுமுள்ளு... ராகுல் காந்திக்கு ரத்த காயம்....! பரபரப்பு போராட்டம்!!!



opposition-protest-pm-residence-neet-paper-leak

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம்

தகவலின்படி, இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இதையும் படிங்க: திமுகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்....! போலீஸ் அதிரடி கைது...பெரும் பரபரப்பு.!!!

போராட்டத்தின் போது பரபரப்பு

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதாகவும், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற தலைவர்களும் கைது

இதையடுத்து பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் போலீசார் காவலில் எடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதம் நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: BREAKING: முதல்வர் விஜய் தலைமை செயலகத்தில் பரபரப்பு! கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த பாடகர்.... அதிரடியாக கைது செய்த போலீசார்.!!!