“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
7 மணிக்கு மேல் வெளுத்து வாங்கப் போகும் மழை? வானிலை நிலவரம் இதோ!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 6) இரவு 7 மணிக்கு மேல் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இன்றைய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெயிலுக்கு நடுவே வந்த மழை அப்டேட்! 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!