வெயிலுக்கு நடுவே வந்த மழை அப்டேட்! 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு



Sep 5 weather update

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rain update

மேலும், இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain update

மழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். மேலும், இடி-மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளி, உயரமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!