தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!



Weather update on September 4

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (செப். 4) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain update

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க: கோயில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் ரமேஷ் புதிய விளக்கம்!

இந்த மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மழையின் போது தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பதுடன், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rain update

கனமழை பெய்யும் நேரங்களில் மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகளின் அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மழை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?