சினிமாவில் திரைக்கு பின்னால் நடந்ததை போட்டு உடைத்த சமீரா ரெட்டி! யாரை சொல்கிறார் சமீரா.? நெட்டிசன்களைக் கிளறிவிட்ட கமெண்ட்..!!!



actress-sameera-reddy-opens-up-about-body-shaming-in-fi

தமிழ் திரையுலகில் சமீரா ரெட்டி நடித்த பல படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் நிறம், தோற்றம் மற்றும் உயரம் உள்ளிட்ட காரணங்களால் சந்தித்த உடல் அவமதிப்புகள் குறித்து அவர் தற்போது வெளிப்படையாகப் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அழகின் பெயரில் ஏற்பட்ட அழுத்தங்கள்

சினிமாவில் அறிமுகமான காலத்தில், தனது மாநிற தோற்றத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முகத்தில் பல அடுக்குகள் செயற்கை வெள்ளை மேக்கப் பூசப்பட்டதாகவும், உடல் முழுவதும் தனித்துவமான பெயிண்ட் பயன்படுத்தப்பட்டதாகவும் சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தனது எடை மற்றும் கண்கள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்ததால், போலியான உடல் அமைப்பைக் காட்டும் ஆடைகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கே என்ன பார்க்க பயமா இருந்துச்சு! ரஜினி படப்பிடிப்பில் பட்ட அவஸ்தை....98 கிலோவிலிருந்து ஸ்லிம் ஆன குஷ்பு! அவரே சொன்ன ஃபிட்னஸ் ரகசிய சீக்ரெட்!!!

உயரம் காரணமாக சந்தித்த சவால்

தனது உயரமும் திரையுலகில் ஒரு சவாலாக இருந்ததாகக் கூறிய அவர், தன்னுடன் நடித்த சில ஹீரோக்கள் தன்னை விடக் குள்ளமாக இருந்ததால், கேமராவுக்கு முன்பு குனிந்து நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார். அது சில நேரங்களில் 'சர்க்கஸ் செய்வது போல' இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் மத்தியில் விவாதம்

40 வயதைக் கடந்த பிறகே அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து முழுமையாக மீண்டதாகக் கூறிய சமீரா ரெட்டி, “ஹீரோ குள்ளமாக இருந்தால் அது அவரது பிரச்சனை; என் தவறில்லை” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். அவர் எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்தக் கருத்து யாரை நோக்கி கூறப்பட்டது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்களும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

இதையும் படிங்க: அந்த அனுபவம் என்னை மனரீதியாக பாதித்தது! அழுதேன், ஆனாலும் இயக்குனர் என்னை விடல..படப்பிடிப்பில் நிகழ்ந்ததை 30 வருடம் கழித்து கூறிய நடிகை மோகினி!!!!