குடும்ப பெண்கள், மாணவிகள் டார்கெட்.. மோசடி பணத்தில் கோடீஸ்வரன்.. யார் இந்த கேடி?
நான் அவன் இல்லை திரைப்பட பாணியில், பெண்களை ஏமாற்றி மிரட்டி நகைகளை பறித்து செல்வந்தரான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவி:
Kumari News Today: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு பகுதியில் வசித்து வரும் 11 ம் வகுப்பு மாணவி, கடந்த வாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார். இந்த புகாரில், மார்த்தாண்டம், பாளையங்கட்டி பகுதியில் வசித்து வரும் ஜெனிஸ் (வயது 25) என்பவர், தன்னிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி 40 சவரன் தங்க நகைகளை பறித்து பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இந்த விஷயம் குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் நடந்த தகராறு.. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்.!
போக்ஸோ வழக்குப்பதிவு:
விசாரணையில் ஜெனீஷின் அத்துமீறல் குறித்த தகவல் உண்மை என அம்பலமாகவே, அவரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தை இருக்கும் நிலையில், இவ்வாறான மோசடி செயலில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இவர் மாணவி மட்டுமல்லாது வசதியான குடும்பங்களை சேர்ந்த பெண்கள், அரசு ஊழியர்களின் மகள்கள், தொழிலதிபர்களின் மகள்கள் என பணம் அதிகம் உள்ள இடத்தில் பெண்களை குறிவைத்து நெருக்கமாக பழகி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

பணம் பறிப்பு:
நெருக்கமாக பழகிய பின்னர் தங்க நகைகள், பணம் வாங்கி சொத்து சேர்த்தவர், மோசடி பணத்தில் ஆம்னி பேருந்து, 2 சொகுசு கார்களையும் வாங்கி செல்வந்தராக வலம்வந்துள்ளார். சவுண்ட்ஸ் சர்விஸ் தொழில் செய்து வந்தவ, அதற்கு தேவையான அதிநவீன பொருட்களையும் வாங்கி இருக்கிறார். இவரிடம் சிக்கிய பெண்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டம் எப்படி?
அதாவது, கல்லூரி, பள்ளி மாணவிகளை பின்தொடர்ந்து காதல் வலையில் வீழ்த்தும் இவர், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து நெருக்கமாக இருந்து நகைகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பள்ளி மாணவி போல கல்லூரி மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகிய நிலையில், அவரிடம் இருந்து 26 சவரன் நகையை பறித்துள்ளார். பின் ஜெனீஷின் உண்மை ரூபம் தெரியவந்ததும், அவர் நகைகளை கேட்க, ஜெனீஷ் நகை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வந்தாலும், தொடர்ந்து மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார். திருமணமான பெண், மாணவிகள் என நகைகள் அணிந்து வருவோரை நோட்டமிட்டு பெண்களை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். தொழிலதிபரின் திருமணமான மகள், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நபரின் மனைவி என மோசடி தொடர்ந்தாலும், ஒருசில நேரம் குடும்ப மானம் கருதி அவர்கள் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேசி பிரச்னையை முடித்துக்கொண்டுள்ளனர். இதனால் குற்றவாளி துணிகரமாக குற்றத்தை அரங்கேற்றி வந்துள்ளார். இறுதியாக பெண் அரசு பணியாளரான பள்ளி மாணவியிடம் நகை மோசடி செய்து, மாணவியின் தாய் மகளின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.

டார்கெட் எப்படி ?
அதாவது, வசதியான நபரைபோல தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜனீஷ் பேருந்து நிலையம், திரையரங்கம், கல்லூரி, பள்ளி வளாகத்துக்கு அருகில் உயர்ரக இருசக்கர வாகனம், காரில் சென்று மாணவிகளை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். விதவிதமான ஆடை, பரிசுகள், செல்போன் என ஏமாற்றி நகைகளை வாங்கியுள்ளார். ஜெனீஷின் லீலை தெரியவந்ததும் தனிப்படை காவல்துறையினரிடம் ரூ. 1 லட்சம் தருவதாகவும் பேரம் பேசி இருக்கிறார். தற்போது போக்ஸோ வழக்கில் சிக்கி, தனிப்படை காவல்துறையினரின் கவனிப்புக்குப்பின் ஜெனீஷ் வாயை மூடி இருக்கிறார்.
இதையும் படிங்க: 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. 35 வயது இளைஞரின் பதறவைக்கும் செயல்.!