மதுபோதையில் நடந்த தகராறு.. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்.!
திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுபானம் அருந்தினார்:
திருப்பூர் மாநகராட்சி, ஒன்றாவது வார்டு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் முகுந்த். இவர் நேற்று இரவில் செட்டிபாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மதுபானம் அருந்தி இருக்கிறார். தொடர்ந்து, அவர் மதுபோதையில் அவ்வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. 35 வயது இளைஞரின் பதறவைக்கும் செயல்.!
பீடி கேட்டார்:
அச்சமயம், அவ்வழியாக வந்த 30 வயதுடைய வடமாநில இளைஞர், முகுந்திடம் ஹிந்தி மொழியில் பீடி கொடுக்குமாறு கேட்டுள்ளார். முகுந்த் பீடி கொடுக்க மறுக்க, வடமாநில இளைஞர் முகுந்தை ஹிந்தி மொழியில் தகாத வார்த்தையால் திட்டி இருக்கிறார்.

கல்லைப்போட்டு கொலை:
இதனால் ஆத்திரமடைந்த முகுந்த், வடமாநில இளைஞரை தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின் ஆத்திரத்தில் அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டதில், வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் முகுந்தை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த வடமாநில இளைஞரின் அடையாளம் தெரியாததால், அவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை.. 20 பேர் கும்பல் பரபரப்பு செயல்.. கடலூரில் பயங்கரம்.!