ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை.. 20 பேர் கும்பல் பரபரப்பு செயல்.. கடலூரில் பயங்கரம்.! 



Cuddalore Horror: 20-Member Gang Chases and Hacks Man to Death Over Long-Standing Rivalry

ரௌடிகளுக்கு இடையேயான முன்விரோதத்தில் நடந்த பயங்கர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.  

முன்விரோதம்: 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி, கீழ் வடக்குத்து கிழக்கு தெருவில் வசித்து வருபவர் கோபி (வயது 30). இவர் பிரபல ரௌடி ஆவார். அங்குள்ள இந்திரா நகர் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பில் வசித்து வருபவர் அமிர்தலிங்கம். இவரின் மகன் ஆனந்தராஜ் (வயது 36). உள்ளூர் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இருக்கும் இருவரும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு விரோதிகள் ஆகியுள்ளார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. 

இதையும் படிங்க: கள்ளக்காதலி தற்கொலை செய்த சோகத்தில், கள்ளக்காதலன் விபரீதம்.. ஷாக் பின்னணி.! 

மதுபானம் அருந்தினார்: 

இந்நிலையில், நெய்வேலி வட்டம் 2 ல் இருக்கும் அரசு மதுபானக்கடையின் பின்புறம் சுடுகாடு உள்ளது. இங்கு ஆனந்தராஜ், தனது நண்பர் நரேஷ்குமார் (வயது 30) என்பவருடன் சேர்ந்து மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தார். அச்சமயம், கோபி மற்றும் அவரின் நண்பர்கள் என 20 பேர் 3 காரில் வந்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ஆனந்தராஜ் தரப்பு தப்பியோடி இருக்கிறது. 

Crime news

விரட்டிச்சென்று கொலை: 

விடாமல் துரத்திச்சென்ற கோபி தரப்பினர், அவர்களை வெட்டி இருக்கின்றனர். இவர்களின் கையில் சிக்கிய ஆனந்த்ராஜ் மற்றும் நரேஷ் குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். இதில் நரேஷ் குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஆனந்தராஜ் தப்பியோடி குடியிருப்பு பகுதியில் தஞ்சம் புகுந்தார். 

விசாரணை: 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து ஆனந்தராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நரேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு நீ, வாழ்க்கைக்கு அவ.. பண விவகாரத்தில் கள்ளக்காதலியை கணவருடன் சேர்த்து தீர்த்துக்கட்டிய போலீஸ்காரர்.. பதறவைக்கும் சம்பவம்.!