உல்லாசத்துக்கு நீ, வாழ்க்கைக்கு அவ.. பண விவகாரத்தில் கள்ளக்காதலியை கணவருடன் சேர்த்து தீர்த்துக்கட்டிய போலீஸ்காரர்.. பதறவைக்கும் சம்பவம்.! 



Telangana Police Constable Arrested for Allegedly Killing Lover and Her Husband Over ₹3 Lakh Money Dispute

கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவம் அதிரவைத்துள்ளது. 

தம்பதி: 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரியபெட் மாவட்டம், மோட்டா பகுதியில் வசித்து வருபவர் நாகுலு (வயது 48). இவரின் மனைவி பூபா (வயது 41). தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனிடையே, மகள் - மருமகன் இடையே நிலவிய பிரச்சனை காரணமாக அவ்வப்போது காவல்நிலையம் சென்று வந்துள்ளனர். 

இதையும் படிங்க: 12 பேர் சேர்ந்து மாணவரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. சென்னையில் நடந்த திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பரபரப்பு தகவல்.! 

பழக்கம்: 

அப்போது, காவல் நிலையத்தில் வேலை பார்த்துவந்த காவலர் ஷெரீப் என்பவருடன் பூபாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், ஷெரீப்பிடம் ரூ.3 லட்சம் பணம் பெற்றுக்கொண்ட பூபா, மருமகனுக்கு கொடுத்துள்ளார். 

Crime news

திருமண ஏற்பாடு: 

இதனிடையே, ஷெரீப்பின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்ததால், ரூ. 3 லட்சம் பணத்தை பூபாவிடம் கேட்டுள்ளார். அவரோ பணத்தை திரும்ப கேட்டால் வருங்கால மனைவியிடம் கள்ளக்காதல் விவகாரம் குறித்து தெரிவிப்பேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் கள்ளக்காதலியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஷரீப், சம்பவத்தன்று வங்கியில் ஆடு லோன் வாங்கித்தருவதாக கூறி பூபாவை அழைத்துள்ளார். 

கொலை திட்டம்: 

அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து கொட்டகையை பார்க்க வேண்டும் என கூறியவர், அதனை தயார் செய்ய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கொலை திட்டத்துடன் சென்றவர், உடன் ஆட்கள் இருந்ததால் அதனை கைவிட்டார். பின் கணவன் - மனைவி இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டவர், நாகுலுவை கொலை செய்து எரு எரியூட்டும் குழியில் போட்டு புதைத்துள்ளார். 

Crime news

உல்லாசம் & கொலை: 

பின் ஷெரீப் பூபாவின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்து ஆட்டுக்கொட்டகைக்கு வந்தவர், அங்கு கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, கள்ளக்காதலியை தலையில் கட்டையால் அடித்துக்கொலை செய்து உடலை புதைத்துள்ளார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி ஷ்ரீப்பை கைது செய்தனர். 

இதையும் படிங்க: வீரனை குடித்துவிட்டு வீரமாக சில்மிஷம் செய்த வடக்கன்ஸ்.. உள்ளே தூக்கி வைத்த போலீஸ்.!