BREAKING: வானதி சீனிவாசன் பதவி பறிப்பு...! பாஜக போட்ட பக்கா பிளான்..!!!
பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக தேசிய மகளிரணியை வழிநடத்திய அவருக்குப் பதிலாக, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி செளத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6 ஆண்டுகளாக தேசிய மகளிரணிக்கு தலைமை
பாஜகவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பை வகித்து வந்த வானதி சீனிவாசன், கடந்த ஆறு ஆண்டுகளாக மகளிரணித் தலைவராக செயல்பட்டு வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், மகளிர் தொடர்பான அமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஆடியோ குண்டை போட்ட அண்ணாமலை! கையில் இருக்கும் அந்த புதிய வீடியோ? தமிழக அரசியலில் பரபரப்பு!!!
இந்நிலையில், தேசிய மகளிரணிக்கு புதிய தலைவரை கட்சி நியமித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி செளத்ரி, பாஜக தேசிய மகளிரணி தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
சமூக சேவையில் இருந்து அரசியலுக்கு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், வழக்கறிஞராகவும் சமூக ஆர்வலராகவும் தனது பணியைத் தொடங்கினார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அவர், கோவை மக்கள் சேவை மையம், தாமரை சக்தி, புதிய இந்தியா மன்றம் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கி பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் தொடரும் பணி
தற்போது கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசன், தொகுதி சார்ந்த மக்கள் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தேசிய அளவில் மகளிரணியை வழிநடத்திய அனுபவத்துடன், இனி கட்சியின் அடுத்தகட்ட அரசியல் மற்றும் மக்கள் பணிகளில் அவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் புதிய நியமனம் செய்யப்பட்டிருப்பது பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வானதி சீனிவாசன் தேசிய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக அவரது அரசியல் பயணம் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்! பரபரப்பு வீடியோ..!!!