திரிஷா - விஜய் விவகாரம்.. மனம் திறந்த நடிகர் ஸ்ரீமன்... ஆமோதிக்கும் ரசிகர்கள்.!
விஜய் மற்றும் திரிஷா நல்ல நண்பர்கள் என ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகள்:
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்களுக்கு மாற்றத்தை வழங்கியே தீருவேன் என்ற முடிவில் தேர்தல் பயணத்தில் களமிறங்கி இருக்கிறார். இதற்காக தனது திரை வாழ்க்கைக்கும் முடிவுகட்டி தேர்தல் பணிகளில் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கூட்டணி குறித்த முக்கிய முடிவை சொன்ன TVK விஜய்.! உஷார் நிலையில் தொண்டர்கள்.!
நான்குமுனைப்போட்டி:
விஜயின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் நேரடியாக 4 முனைப்போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக, அதிமுக, நாதக, தவெக என அரசியல்கட்சிகள் வெற்றிக்காக களப்பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. கரூரில் நடந்த துயர சம்பவத்துக்குப்பின், அரசியல் வியூகங்களில் விஜய் தடுமாறினாலும், அதிமுகவில் இருந்து தவெக சென்ற செங்கோட்டையன் முயற்சியில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

சங்கீதாவின் குற்றச்சாட்டு:
சமீபத்தில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டி இருந்தது தொடர்பான தகவல் வெளியானது. மேலும், நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் பழக்கத்தில் இருப்பதாகவும், அதனை தான் கண்டித்தபோது தன்னை வீட்டுச்சிறையில் வைத்ததாகவும் விஜயின் மனைவி குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த விஷயம் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. பலரும் விஜயை நடிகை ஒருவருடன் தொடர்புபடுத்தி பேச தொடங்கினர்.
ஸ்ரீமன் பதில்:
இந்நிலையில், நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான ஸ்ரீமன், இதுகுறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகையும் - விஜயும் நண்பர்களாக இருக்கலாம் என ரசிகர் ஒருவர் தெரிவித்த பதிலுக்கு, தனது கைதட்டலை ஆதரவாக பதிவிட்டு பதிலளித்து இருக்கிறார். சமீபத்தில் விஜயும் - நடிகையும் திருமணம் ஒன்றுக்கு சென்ற தகவலும் வெளியாகிய நிலையில், ஸ்ரீமனின் பதில் கவனம் பெற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இருவரின் உறவு நட்பு அடிப்படையிலானது என்பதை தெளிவுபடுத்துகிறது. ஸ்ரீமன் நடிகர் விஜயின் ஆரம்பகால நண்பர்களில் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இடைவெளிக்கு பிறகு மீண்டும் மிரட்ட ஆரம்பிக்கும் விஜய்! கரூருக்குப் பிறகு இப்போ சேலத்தில்... விஜயின் அடுத்த மூவ் இதுதான்.! அரசியலில் பரபரப்பு....!